செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய கமல்ஹாசன் எம்.பி.

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய கமல்ஹாசன் எம்.பி.

0 minutes read

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான (எம்.பி.) கமல்ஹாசன், தமிழக முதல்வர் விஜய்யை இன்று (16) நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

தமிழக முதல்வருக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன், சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார்.

இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட தனது எக்ஸ் பதிவில்,

“தமிழக முதல்வர் தம்பி விஜய்யை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழகத்தை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார்.

சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.

பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழக அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன், மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைத்திருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.