செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு: அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு; முதலமைச்சர் அஞ்சலி

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு: அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு; முதலமைச்சர் அஞ்சலி

1 minutes read

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் “இயக்குநர் இமயம்” என போற்றப்பட்ட பாரதிராஜா இன்று (ஜூன் 10) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு 84 வயதாகும்.

1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, முதல் படத்திலேயே தமிழக அரசின் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார். பின்னர் பல முக்கிய திரைப்படங்களை இயக்கியதுடன், நடிகராகவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

ராதா, ராதிகா, ரேவதி உள்ளிட்ட பல நடிகைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. ஸ்டுடியோ மையமாக இருந்த தமிழ் சினிமாவை கிராமங்களின் வாழ்வியல் நிஜங்களுக்குள் கொண்டு சென்றவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

இந்திய திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2004ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் மாரடைப்பால் உயிரிழந்ததிலிருந்து பாரதிராஜாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி

பாரதிராஜாவின் மறைவுச் செய்தி திரையுலகினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு திரைப்படப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

முழு அரசு மரியாதை அறிவிப்பு

பாரதிராஜாவின் கலைச் சாதனைகளையும் தமிழ் திரைப்படத்துறைக்கு அவர் செய்த பங்களிப்பையும் மதித்து, அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

திரைத்துறை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு: அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு; முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.