செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா மீண்டும் தலைதூக்கும் சோமாலிய கடற்கொள்ளை – 100க்கும் மேற்பட்ட மாலுமிகள் பணயக்கைதிகளாக!

மீண்டும் தலைதூக்கும் சோமாலிய கடற்கொள்ளை – 100க்கும் மேற்பட்ட மாலுமிகள் பணயக்கைதிகளாக!

1 minutes read

மத்தியக்கிழக்கில் அதிகரித்து வரும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு மத்தியில், சோமாலியா மற்றும் ஏமன் கடற்பரப்பில் கடற்கொள்ளை மீண்டும் பெரியளவில் தலைதூக்குகிறது என்ற கவலைகளை இது எழுப்பியுள்ளது.

சோமாலியாவின் புன்ட்லாந்து Puntland கடற்கரைக்கு அப்பால் கேமரூன் கொடியுடன் கூடிய எம்/வி லுட்டுஃப் (M/V LUTUF) கப்பலும், ஏமன் கடற்கரைக்கு அப்பால் எரித்திரிய கொடியுடன் கூடிய சிபு 1 (SIBU 1) என்ற எண்ணெய் கப்பலும் கடந்தப்பட்ட நான்கு கப்பல்களில் உள்ளடங்கியுள்ளன.

மொகடிஷுவில் உள்ள ஒரு இராணுவப் பயிற்சி மையத்திற்கு கொண்டு செல்லப்படவிருந்த துருக்கிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை லுட்டுஃப் கப்பல் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த கப்பல் கடந்த திங்கட்கிழமை கைப்பற்றப்பட்டதாக சோமாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலார் மூவ்மென்ட் ஷிப்பிங் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல், ஆயுதங்கள், தகவல் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் உபகரணங்களை ஏற்றிச் சென்றது.

குறித்த கப்பலில் 10 பேர் பயணித்த நிலையில், அவர்களில் ஆறு இந்தியர்கள், ஒரு துருக்கியர், ஒரு ஜார்ஜியர் மற்றும் இரண்டு செர்பியப் பாதுகாப்புக் காவலர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே ஏமன் கடற்பகுதியில், சிபு 1 என்ற கப்பல் ஏழு ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்களால் தனியாகக் கடத்தப்பட்டு, சோமாலிய கடல் பகுதியை நோக்கித் திருப்பிவிடப்பட்டது.

இந்த எரிபொருள் கப்பல் ஈரானின் நிழல் கடற்படையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும், ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் துறைமுகமான ராஸ் ஈசாவிற்கு வழக்கமாக எரிபொருளை ஏற்றிச் சென்று வந்ததாகவும் நம்பப்படுகிறது. அதன் 20 பேர் கொண்ட குழுவினரின் நிலை தெரியவில்லை.

இதேவேளை இந்த வாரம் கைப்பற்றப்பட்ட இரண்டு கப்பல்கள் உட்பட, தற்போது ஆறு கப்பல்கள் கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அந்தக் கப்பல்களில் 100க்கும் மேற்பட்ட மாலுமிகள் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் சோமாலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.