தாய்லாந்து விபத்தில் 11 பேர் பலி

தாய்லந்துத் தலைநகர் பேங்கொக்கில் ஒரு வேன் விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் எரிந்து சாம்பலாயினர்.

அந்த வேனில் 12 பேர் இருந்தனர். கடந்த சனிக்கிழமை (21) அம்னாத் சாரனிலிருந்து பேங்கொக் போகும் வழியில் விபத்து நேர்ந்தது.

ஜன்னல் வழி வெளியேறிய ஒரே ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்.

“உறங்கிக்கொண்டிருந்தபோது திடீரென அலறல் கேட்டது. திடுக்கிட்டு எழுந்தேன்.

கண் விழித்து பார்ப்பதற்குள் வேன் தலைகீழானது. என்ன நடந்தது என்று தெரியவில்லை. உடனே ஜன்னல் வழியே வெளியேறினேன். பின்னர் வேன் வெடித்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.

வேன் வெடித்ததற்கான காரணம் கண்டறியப்படவில்லை. விசாரணை தொடர்கிறது.

ஆசிரியர்