பிரான்சின் ஒரு பகுதியாக நீடிக்க வேண்டுமா அல்லது சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா என்பது குறித்து நியூ கலிடோனியா மக்களின் கருத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
நேற்று நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் வாக்காளர்கள் திரளாக வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாக்கெடுப்பு முடிவில், 56.9 சதவீத வாக்குகள் பிரான்ஸிடம் இருந்து விடுதலை வேண்டாம் என்று விழுந்துள்ளதாக முதற்கட்ட செய்திகள் கூறுகின்றன.
பிரான்சிடமிருந்து விடுதலை கோரிய பிரிவினையாளர்களின் முயற்சி இதன் காரணமாக தோல்வி அடைந்துள்ளது.
