பதவியேற்றதன் பின்னர், நான்காவது முறையாக சீனாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார் பிரதமராக நரேந்திர மோடி.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உயர்மட்ட உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவிற்கு வருகை தருமாறு சீன தலைவருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அதேவேளை, தோக்லாம் எல்லை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் வூஹான் நகரில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது, இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயான ராஜதந்திர உறவுகள் வலுப்பட்டுள்ளதாக நரேந்திர மோடியும் ஜின் பிங் இணைந்து தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
