Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இதுதான் வெங்கையா நாயுடுவின் இரண்டாண்டு சாதனைகள் – புத்தகம் வெளியீடு

இதுதான் வெங்கையா நாயுடுவின் இரண்டாண்டு சாதனைகள் – புத்தகம் வெளியீடு

3 minutes read
நாளை சென்னையில் நடைபெறவுள்ள  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின்  சாதனைகளை ஆவணப்படுத்தும் புத்தக வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர்  அமித்ஷா கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார். தமிழக முதல்வர்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் சிறப்பு  விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
துணை ஜனாதிபதி வெக்கையா நாயுடுவின் இரண்டாண்டு சாதனைகளை ஆவணபடுத்தும் புத்தக வெளியீட்டு விழா நாளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் காலை 10 ; 30 மணிக்கு நடைபெற உள்ளது.  அதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார், வெக்கையா நாயுடு துணை ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டாண்டுகள் நிறைவடைகிறது,
எனவே இதுவரை எந்த துணை ஜனாதிபதிகளும் செய்யாத சிறப்புகள் வெங்கையா நாயுடுவுக்கு உண்டு, அதாவது அவர் பதிவியேற்ற இரண்டாண்டுகளில் 330 க்கும் மேற்பட்ட பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டுள்ளார், 4 கண்டங்களில் உள்ள 19 நாடுகளுக்கு பயணம் செய்துள்ள அவர், இதுவரை எந்த துணை ஜனாதிபதியும் பயணிக்காத ,பனாமா, கோஸ்டரிக்கா, கவுதமாலா, மால்டா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து அங்குள்ள மக்களிடம்  உரை நிகழ்த்தியுள்ளார்.
இதுவரை 61 பட்டமளிப்பு விழாக்களிலும், 25 சொற்பொழிவு கூட்டங்களிளும், 35 க்கும் அதிமாகமுறை பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் அவர் கலந்துரையாடல் நிகழ்த்தியுள்ளார் என்பது சிறப்பாகும், இதுவரை 97 முறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சென்று அங்கும் அவர் உரையாற்றியுள்ளார் என்பது தனிசிறப்பு.
எனவே அவரது இந்த இரண்டாண்டு சாதணைகளை ஆவணப்படுத்தும் விதமாக ”கவனித்தல் கற்றல் மற்றும் தலைமைஏற்றல்” என்ற தலைபில் புத்தகம் உருவாகி உள்ளது.  இதற்கான ஏற்பாடு சுற்றுசூழல் மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் செய்யப்பட்டுள்ளது, இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன், இஸ்ரோ முன்னால் இயக்குனர் டாக்டர் கிருஷ்ணசாமி கஷ்தூரிரங்கன்,துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி. அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி,விஐடி பல்கலைகழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
தமிழகம் தான் என் தாய் வீடு வெங்கையா பீலிங்ஸ்;
இத்தனை சிறப்பு கொண்ட வெங்கையா நாயுடுவின் இந்த புத்தக வெளியீட்டு விழாவினை  இந்தியாவில் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் நடத்தலாம், ஆனால் குறிப்பாக தமிழகத்தில் நடத்துவதற்கான குறித்து பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது , ஆந்திர மாநிலத்தில் நான் பிறந்து வளந்திருந்தாலும் தமிழகம் எனது மற்றொரு தாய்வீடு , தமிழக மக்கள் மிகமிக அன்பானவர்கள் என்பதால் ஆந்திரத்திற்கு செல்வதை விட தமிழகத்திற்கு வருவதையே நான் விரும்புகிறேன் என்று வெங்கையா நாயுடு பல மேடைகளில் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம். அதற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
தமிழக மக்களுடன் நெருங்கி வர திட்டம்;
வெகுநாட்களாக தமிழகத்தில் கால்பதிக்க துடிக்கும் பாஜகவால் இங்கு பெருமளவில் சோபிக்க முடியவில்லை, காரணம் திராவிட பாரம்பரியத்தில் ஊறிக்கிடக்கும் தமிழக மக்களிடம் பாஜக அன்னிகட்சியாக கருதும் மன நிலை உள்ளது,
எனவே தமிழக மக்களின் நெஞ்சில் பாஜவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தம் முயற்ச்சியில் பாஜக இறங்கியுள்ளது, எனவே பாஜகவின் முக்கிய நிகழ்ச்சிகள் அடிக்கடி தமிழகத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக பாஜக மேல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன சொல்லி சமாளிப்பத்து;
நாளை அமித்ஷாவுடன் மேடையேறும் முதலமைச்சர் தமிழகத்திற்காக கோரிக்கைகளை மனுவாக கொடுக்க திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிகிறது,அதே நேரத்தில்  வேலூர் நாடாளுமன்ற தோர்தல் தோல்வி குறித்து அமித்ஷாவிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று அலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More