முன்னாள் பிரதமர் சரண் சிங் பிறந்த நளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தொடர் சுட்டுரைப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவிலேயே மேற்படி கூறியுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “முன்னாள் பிரதமர் சரண் சிங் தனது வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் நலன்களுக்காக குரல் கொடுத்தவர். விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தங்களின் விளைபொருள்களுக்கு நல்ல விலையைப் பெற வேண்டும் என்றும் பாடுபட்டவர். விவசாயிகளின் வருமானம் பெருக வேண்டும் என்று விரும்பியவர்.
சரண் சிங்கின் பிறந்த நாள் விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்படும் வேளையில் அவரை முன்னுதாரணமாகக் கொண்டு விவசாயிகளின் நலன்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எந்த சூழ்நிலையிலும் விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
விவசாயிகளின் நலன்களைக் காக்க பிரதமர் மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த நேரத்தில் மீண்டும் அதை வலியுறுத்திச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் அரசு உணர்வுபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர்கள் தங்களின் போராட்டத்தை விரைவில் திரும்பப் பெறுவார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.