செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புக்கு எதிராக தொல்.திருமாவளவன் கண்டனம்!

யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புக்கு எதிராக தொல்.திருமாவளவன் கண்டனம்!

0 minutes read

யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது, “இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மேலும், இலங்கை அரசாங்கத்தால் இடிக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி மீண்டும் நிறுவப்பட வேண்டும்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு ஓரிரு நாட்களில் இச்சம்பவம் நடந்திருப்பது, இந்தியாவை இலங்கை அரசு பொருட்படுத்தவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.

சீன அரசின் கூட்டாளியாக மாறி இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் இலங்கை அரசை, இந்தியா இப்போதும் நட்பு சக்தியாகக் கருதுவதும், தமிழர்களின் நலனை முற்றாகப் புறக்கணிப்பதும் சரியான அணுகுமறை அல்ல என்பதை சுட்டிக்காட்டுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.