செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை –இதுவரையில் 44 வழக்குகள்!

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை –இதுவரையில் 44 வழக்குகள்!

1 minutes read

விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 2 மாதங்களாக போராடி வந்த விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினர்.

இதன்போது விவசாயிகளில் ஒரு பிரிவினர் பொலிஸார் அனுமதி அளித்த நேரத்துக்கு முன்னரே, அனுமதிக்காத வீதிகளின் வழியாக பேரணியை நடத்தினர்.

இதனால் பல இடங்களில் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் பொலிஸாரின் எதிர்ப்பை மீறியும் கான்கிரீட், இரும்பு தடுப்பு வேலிகளை டிராக்டர்கள் மூலம் உடைத்துக்கொண்டு அவர்கள் முன்னேறினர்.

பொலிஸாரின் கட்டுப்பாடுகளை மீறி சென்றதால் பொலிஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளின் பேரணியை கலைக்க முற்பட்டனர். இதில் இரு தரப்பை சேர்ந்த பலர் காயமடைந்தனர்.

டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து வீடியோ ஆதாரங்களை கைப்பற்றிய டெல்லி பொலிஸார் வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸ் அதிகாரி ஈஷ் சிங்கால் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.