கமலஹாசனுக்கு திடீர் உடல்நல குறைவு

நடிப்பு திறமையால் பலகோடி ரசிகர்களை தனக்கென கொண்ட கமலஹாசன் நேற்று இரவு உடல் நல குறைவால் திடீர் என்று மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

கமலஹாசன் தொடர்ச்சியாக சில காலங்களாக படப்பிடிப்பு , நிகழ்ச்சசித்தொகுப்பு , அரசியல் செயற்பாடு என்று மிகவும் நேரமற்று செயற்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகவே உள்ளது.

அந்த வகையில் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்று வீடு திரும்பிய நிலையில் நேற்று இரவு சிறிய உடல் நல குறைவால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழமையான பரிசோதனைகாக்கவும் ஒய்வு தேவை என்ற வைத்திய வேண்டுகோளுக்கு அமையவே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டர் என்று கமல் தரப்பு கூறுகின்றனர்.

ஆசிரியர்