திட்டமிட்டு நகைக்கடையில் திருடிய சிறுவர்கள்

சிறுவர்கள் மூவர் சேர்ந்து இந்தியாவின் சோலையூரில் உள்ள மிக பிரம்மாண்டமான நகை கடையில் தங்க நகையை திருடி பொலீசிடம் சிக்கியுள்ளனர்.

திருடப்பட்ட நகை இந்திய ரூபாய் மதிப்பில் 11/2 கோடி ஆக மதிக்க தக்கது.

இந்த திருட்டை மேற்கொள்ள பல மாதங்கள் மூவரும் திட்டம் தீட்டியுள்ளதுடன் சிறுவர்கள் அந்த நகை கடைக்கு அருகில் உள்ள ஜூஸ் கடையில் வேலை செய்பவர்கள் ஆவர் . எனவே பல மாதமாக கடைக்குள் எப்படி நுழையலாம் என்று திட்டங்களை வகுத்து இறுதியாக குழாய் வழியாக சென்று துளையிட்டு நகையை திருடி உள்ளனர்.

இதற்கு 4 மாதங்கள் முயற்சி செய்துள்ளனர் இவை அனைத்தும் கைது செய்த சிறுவர்கள் பொலிஷ் விசாரணையில் கூறிய வாக்குமூலமாகும். இந்த சிறுவர்கள் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட உள்ளனர்.

ஆசிரியர்