March 26, 2023 10:27 pm

இந்திய எல்லைக்கு சீனாவால் அச்சுறுத்தல் | அமெரிக்கா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
இந்திய சீனா எல்லை பிரச்சனை அமெரிக்க தலையீடு

இந்திய – சீனா எல்லை பிரச்சனை நாடுகளுக்கிடையிலான விரோதமாக தலை தூக்கி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா சீனா மீது குற்றமொன்றை முன்வைத்துள்ளது. கால்வன் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தை அடுத்து இரு நாடுகளும் தனது படைபலத்தை எல்லை பகுதியில் அதிகரித்து வருகின்றது. எனினும் சீனா தனது ஆயுதங்களை மேலும் குவித்து கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.

இந்த குற்றச்சாட்டை முழுமையாக தாம் மறுப்பதாக இந்திய சீனா தூதரகம் செய்திதொடர்பாளர் கூறியுள்ளார் . அவர் மேலும் எல்லை பிரச்சனை தொடர்பில் தாம் அமைதியான பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இரண்டு நாடுகளின் பிரச்சனையில் மூன்றாவது நாடான அமெரிக்க தலையிடுவதை தாம் விரும்பவே இல்லை என்றும் கூறியுள்ளார்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் இந்தியாவின் கருத்துக்கள் வெளிவரா வண்ணம் உள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்