December 2, 2023 11:08 am

குடிபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் காரை ஒட்டிய குடிமகன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

குடிபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் காரை ஒட்டிய குடிமகன் . கேரள மாநிலம் கண்ணூர் அருகேயுள்ள தேலே செவ்வா என்ற இடத்தில் ரயில்வே கேட் உள்ளது.

இந்த ரயில்வே கேட் அருகே நேற்றிரவு ஜெயபிரகாஷ் என்பவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார்.

பின்னர் அவர் தண்டவாளத்தில் 15 மீட்டர் த தூரம் காரை ஓட்டி சென்றுள்ளார். இதை கண்ட கேட் கீப்பர் பதறி போய் பொலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலீசார் தண்டவாளத்தில் இருந்த காரை அப்புறப்படுத்தினர்.

மேலும் குடிபோதையில் இருந்த ஜெயபிரகாசையும் கைது செய்தனர். பின்னர் அவர் மீது குடிபோதையில் வாகனத்தை இயக்குதல் மற்றும் ரயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடிபோதையில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்