May 31, 2023 5:10 pm

இலண்டன் ஹரோ நகரில் களைகட்டிய பொங்கல் விழா!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலண்டன் – ஹரோ நகரிலுள்ள தமிழர்களின் பொங்கல் விழா நேற்று (14) நடைபெற்றது.

Harrow Arts Centre இல் ஹரோ நகர சபை உறுப்பினர்களான சுரேஷ் கிருஷ்ணா மற்றும் அவரின் துணைவியார் சசிகலா சுரேஷ் கிருஷ்ணா ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஹரோ நகர சபை மேயர், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஹரோ நகர சபையின் உறுப்பினர்கள், முன்னாள் மேயர்கள் என முக்கிய பிரதிநிதிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்,

ஹரோ நகரத்திலுள்ள பெருமளவிலான தமிழ் மக்களும் இதில் கலந்துகொண்டதுடன் தமிழர்களின் கலை, பண்பாட்டைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் அரங்கில் நடைபெற்றன.

பிரிட்டனில் தமிழர் மரபு மாதமாக ஜனவரி மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரிட்டன் அரசுக்குத் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகளை எடுத்தியம்பும் வகையில் இலண்டனில் பல்வேறு இடங்களில் தமிழர் பெருநாளான தைப்பொங்கல் விழா நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்