கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் புதியதொரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவுசெய்யுமாறு திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருகோணமலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருகோணமலை மாவட்ட தமிழ் பொது அமைப்புக்களின் ஊடகப் பேச்சாளர் யதீந்திரா தெரிவிக்கையில், “திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு தொடர்ந்து 20 வருட காலமாக ஒருவரையே நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

இம்முறை, தேர்தலின்போது ஒரு மாற்று நபரைத் தெரிவுசெய்ய பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட தமிழ் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்

ஆசிரியர்