துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் காட்டுயானையின் சடலம் மீட்கப்பட்டது

கலேவெலவில் உள்ள தண்டுபேதிருப்பவில் காட்டுயானையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலகமாக மீட்கப்பட்ட யானையின் வயது சுமார் 35 என தெரிவித்த அதிகாரிகள், மீட்கப்பட்ட யானையின் தலையில் துப்பாக்கிச் சூடு காணப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த யானை இரண்டு நாட்களுக்கு முன்பு உயிருடன் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்