மீண்டும் தொடர்கிறது வன்னியில் உள்ள மூன்று கிராமங்களின் பெருங்கதை

  

வணக்கம் இலண்டனில் முன்னர் தொடராக வெளிவந்த மூன்று கிராமங்களின் கதை மீண்டும் நாளைமுதல் தொடர்கின்றது.  

பரந்தன் கிளிநொச்சியில் ஓய்வு நிலை அதிபராக இருக்கும் மகாலிங்கம் பத்மநாபன் தான் பிறந்து வளர்ந்த கிராமங்களின் பின்னணியை பசுமைமாறாது மீண்டும் கண்முன்னே நிறுத்த தொடருகின்றார் இப் பெருந்தொடரை. தற்போது குமரபுரம் கிராமத்தில் தனது ஓய்வு காலத்தை எதிர்கால சந்ததிக்கான வரலாற்றுப் பதிவாக்கும் முயற்சியை செவ்வனவே செய்கின்றார். 

இன்றைய தலைமுறை தொலைத்து நிற்கின்ற நினைவுகளை கால சக்கரத்தால் மீண்டும் சுழல வைக்கின்றார் கட்டுரையாளர்.  முன்னர் தொடராக வெளிவந்த போது பெரும் வரவேற்பை பெற்ற இந்த தொடரின் முக்கிய பகுதிக்குள் செல்ல இருக்கின்றார். 

1900 ஆம் ஆண்டளவில் ஒருநாள்……

தம்பையர், ஆறுமுகம், முத்தர், தம்பையரின் நெருங்கிய உறவினர்களாகிய ஐந்து பேர் அடங்கிய இளைஞர் குழு ……இவர்களுக்காக 

கச்சாய் துறைமுகத்தில் செருக்கன் கிராமத்தைச் சேர்ந்த இருவர் இரண்டு தோணிகளுடன் காத்திருந்தனர். …….

ஆரம்பமே இவ்வாறுதான் சுவையாக இடம்பெற உள்ளது. நாளைவரை காத்திருங்கள்..

ஆசிரியர் குழு 

வணக்கம் இலண்டன்

 

ஆசிரியர்