செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ’24 மணிநேரமும் மூடிய அறைக்குள் என்னை அடைத்து வைத்துள்ளனர்’– ரிஷாட்!

’24 மணிநேரமும் மூடிய அறைக்குள் என்னை அடைத்து வைத்துள்ளனர்’– ரிஷாட்!

1 minutes read

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதியும் பிரதமரும் இந்தச் சபையில் இருக்கின்றார்கள்.

என்னை கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்தார்கள். வெறும் 5 நாட்கள் மாத்திரமே என்னை விசாரணை செய்தார்கள். 102 நாட்கள் என்னை தடுத்துவைத்துள்ளார்கள். 97 நாட்கள் வரையில் அறையில் அடைத்து வைத்துள்ளார்கள். 24 மணி நேரமும் அந்த அறை மூடப்பட்டு, மலசலகூடத்துக்கு மட்டும் என்னை வெளியில் செல்ல அனுமதிக்கிறார்கள்.

இன்றுவரை எந்தவிதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை. நான் பொய் கூறவில்லை. வேண்டுமென்றால் வந்து பார்க்க முடியும்.

ஜனாதிபதி அவர்களே, இன்னுமொரு விடயம். என்னைக் கைது செய்தபோது, பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் ‘என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?’ என்று நான் கேட்டபோது, எனது அமைச்சில் பணிபுரிந்த மேலதிக செயலாளர் பாலசுப்பிரமணியத்துடன், ஒன்றரை நிமிடம் தொலைபேசியில் உரையாடியதாக கூறினார்கள். இதனால்தான் என்னை கைது செய்துள்ளதாக கூறினார்கள். வேறு எந்தக் காரணமும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.