புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பகிடிவதை தொடர்பில் பல்கலை மாணவர்கள் 35 பேர் கைது

பகிடிவதை தொடர்பில் பல்கலை மாணவர்கள் 35 பேர் கைது

0 minutes read

மாணவர் ஒருவருக்கு பகிடிவதை செய்தமை தொடர்பில் வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாப்பிட்டிய வளாக மாணவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த மாணவர் தங்கியிருந்த விடுத்திக்கு சென்ற சில மாணவர்கள் அங்கிருந்த காவலாளியையும் அம்மாணவரையும் தாக்கியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

தாக்குதலுக்கு இலக்கான விடுதியின் காவலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.