செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அடையாளம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!

அடையாளம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!

0 minutes read

இலங்கையின் வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மகாவலி ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

60 – 70 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீரிகம – ஹொரகெலே வனப்பகுதியில் அடையாளம் தெரியாத மற்றுமொரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.