September 22, 2023 1:31 am

வடக்கில் புதிய வகை போதை மாத்திரை! – படையினர் மீது குற்றச்சாட்டு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வடக்கில் மருத்துவத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை உயிர்கொல்லி போதைப்பொருளாகப் பயன்படுத்தும் கலாசாரம் வேரூன்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்புத் தரப்பினரே இவ்வாறான செயற்பாட்டுக்கு முன்னோடியாக இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

வடக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிர்கொல்லி போதை மாத்திரைகளுடன் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைவசம் வைத்திருந்த மாத்திரைகள், மருத்துவத் தேவைக்கு வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் அவற்றை உயிர்கொல்லி போதை மாத்திரையாக பலர் பயன்படுத்தினர்.

கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அபாயகர ஒளடதங்கள் சட்டத்தின் ஊடாக அத்தகைய வலி நிவாரணிகள் ஆபத்தான உயிர்கொல்லி போதைப்பொருள்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை மருந்தகங்களில் விற்பனை செய்யவும் முடியாது.

இந்தநிலையில் அவற்றுக்குப் பதிலாக மனநோய்க்கு நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் மருந்தை, போதைப்பொருளாக சிலர் உபயோகித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

படையினரே ஆரம்பத்தில் இதனை மருந்தகங்களிலிருந்து அதிகளவு கொள்வனவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

தற்போது வடக்கில் பல இளைஞர்கள் இந்த மருந்தை உயிர்கொல்லி போதைப்பொருளாகப் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்