October 4, 2023 6:01 pm

சுதந்திர தினத்தையொட்டி கொழும்பில் விசேட பாதுகாப்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் முதலாம் திகதி முதல் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளின் சில இடங்களில், வீதித் தடைகளைப் பயன்படுத்தி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்