வவுனியா, செட்டிகுளம் நேரியகுளம் பகுதியில் வீடொன்றுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிறுவன் காணாமல்போனதை அறிந்ததும், சிறுவனின் தந்தை, உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டார். இதன் போது சிறுவன் கிணற்றுக்குள் சிக்கியிருப்பதைக் கண்டனர்.
எவ்வாறாயினும், அவரை மீட்டு செட்டிகுளம் வைத்தியசாலையில் சேர்த்த போதிலும் சிறுவன் உயிரிழந்தார்.