செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அம்பாறையில் யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்!

அம்பாறையில் யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்!

0 minutes read

அம்பாறையில் விவசாய நடவடிக்கைக்காகச் சென்ற மூவரை யானைகள் தாக்கியதில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்மாந்துறை – பெரிய கொக்கனாரை வட்டை பகுதியில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்துலேயே உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான மட்டக்களப்பு, தரவை 1 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த குடும்பஸ்தரே (வயது 55) சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்தத் தாக்குதலில் காயமடைந்த 29 வயதுடைய இளைஞர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் 52 வயதுடைய மலையடி, கிராமம் 2 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த குடும்பஸ்தர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.