செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். பல்கலையில் ஊழியர்கள் போராட்டம்!

யாழ். பல்கலையில் ஊழியர்கள் போராட்டம்!

0 minutes read

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு மணிநேர வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டதுடன் அதன் அடையாளமாக நண்பகல் 12 மணியளவில் யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

“பல்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வேண்டும்”, “மின்சாரம், எரிபொருள், எரிவாயு பொருட்களின் விலைகளைக் குறை”, “நியாயமற்ற வரிக் கொள்கையை உடனடியாகத் திருத்து”, “சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் குழுவின் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்து”, “அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் மீளவும் திறந்து கல்வி உரிமையை உறுதிப்படுத்து”, “பல்கலைக்கழக விவகாரங்களில் கல்வி அமைச்சரின் மௌனம் ஏன்?” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைப் போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், எதிர்வரும் 15 ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ச்சியாகப் போராட்டம் இடம்பெறும் என்று தெரிவித்தனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.