October 4, 2023 5:17 pm

வவுனியாவில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வவுனியா, பூவரசங்குளம் – மணியர்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மணியர்குளத்தின் அணைக்கட்டை அண்மித்த பகுதியில் நேற்றிரவு கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் காணப்படுகின்றது எனப் பொலிஸாருக்குப் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நித்தியநகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சக்திவேல் யசோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் மரணங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்