June 5, 2023 10:20 am

ஜப்பான் பிரதமருக்கு வாக்குறுதி வழங்கிய ரணில்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஜப்பான் உதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் வேலைத்திட்டத்தினை இடைநடுவில் கைவிட்டுச் சென்றமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவலை தெரிவித்தார்.

இரு தரப்பினரதும் இணக்கப்பாடு இல்லாமல் பாரிய திட்டங்களுக்கான இருதரப்பு ஒப்பந்தங்களை இடைநிறுத்துவதை தவிர்ப்பதற்கு அவசியமான சட்டதிட்டங்களை உருவாக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பாரிய திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதைக் கட்டாயப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (25) ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அவர்களை டோக்கியோ நகரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜப்பானிய பிரதமரால் சிநேகபூர்வமான வரவேற்பளிக்கப்பட்டது.

இரு நாடுகளினதும் தலைவர்களது சுமூகமாக கலந்துரையாடலைத் தொடர்ந்து இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்காக இலங்கைக்கு ஜப்பான் வழங்கி வரும் ஒத்துழைப்புக்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

அதேபோல் இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்