December 7, 2023 6:41 pm

யாழில் மோட்டார் சைக்கிளுடன் மோதியவர் மரணம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வீதியைக் குறுக்கே கடக்கும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டவர் உயிரிழந்தார்.

யாழ்., புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் மனோகரன் (வயது – 45) என்பவரே மரணமடைந்தார்.

வரணி, சிட்டிவேரம் அம்பாள் கோயிலுக்குக் கடந்த 6ஆம் திகதி சென்ற பறவைக்காவடி உழவு இயந்திரத்துடன் இவர் நடந்து சென்றுள்ளார். திடீரென வீதியின் மறுபக்கத்தில் உள்ள கடைக்குச் சோடா வாங்குவதற்காக வீதியைக் குறுக்காகக் கடந்துள்ளார். அப்போது எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணும் தூக்கி வீசப்பட்டுக் காயமடைந்திருந்தார்.

காயமடைந்த மனோகரன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார்.

மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்