செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வாகன விபத்தில் தந்தையும் மகனும் மரணம்!

வாகன விபத்தில் தந்தையும் மகனும் மரணம்!

0 minutes read

வாகன விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கொழும்பு, பாதுக்கை பிரதேசத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 38 வயதுடைய தந்தையும், 10 வயதுடைய மகனும் இந்தக் கோர விபத்தில் சாவடைந்துள்ளனர்.

பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மகனை மோட்டார் சைக்கிளில் தந்தை ஏற்றிக்கொண்டு வீட்டுக்குப் பயணித்த வேளையிலேயே கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த 10 வயது சிறுவன் இவ்வருடம் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புக்குச் சென்றிருந்தார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹயஸ் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.