இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் எதிர்வரும் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்தியத் தூதுவரின் அழைப்பை ஏற்று நிகழும் இந்தச் சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்று கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
இதேவேளை, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியத் தூதுவர் இன்று கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.