December 7, 2023 5:08 pm

யாழில் அடிகாயங்களுடன் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நிர்வாணமாக அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கல்வியங்காடு விளையாட்டரங்கு வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மகேந்திரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி நேற்று வெள்ளிக்கிழமை திருமணச் சடங்குக்குச் சென்றவேளை குடும்பஸ்தர் தனிமையில் வீட்டில் இருந்துள்ளார்.

அந்நிலையில் இன்று சனிக்கிழமை காலை உறவினர் ஒருவர் இவர்களது வீட்டுக்குச் சென்றபோது, குடும்பஸ்தர் சடலமாகக் காணப்பட்டதை அவதானித்தார். அவர் உடனே சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதுடன், சடலம் நிர்வாணமாகவும் காணப்படுவதால் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்துக்கு நேரில் விஜயம் செய்த யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி மயூரன் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்