December 7, 2023 11:30 am

யாழ். இந்துக் கல்லூரியில் 33 பேருக்கு 3 ஏ – மாணவர்கள் பெரும் சாதனை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

2022 (2023) ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்துக் கல்லூரி இம்முறை கணிதம், விஞ்ஞானம் ஆகிய இரு பிரிவுகளிலும் முதல் 5 இடங்களையும் பிடித்துப் பெரும் சாதனை புரிந்துள்ளது.

இதற்கமைய விஞ்ஞானப் பிரிவில் முறையே ஆனந்தஜோதி வித்தியாசாகர், கண்ணன் பவிதரன், நாகசேன்னன் சாரங்கன், தர்மலில்கம் அமலன், ரகுதாதன் தனுசன் ஆகியோர் முதல் 5 இடங்களையும் பெற்றுள்ளனர்.

கணிதப் பிரிவில் லெஸ்லி பாஸ்கரதேவன் அபிசேக், சிறிபண்டாகரன் சிநேகன், சந்திரசேகரம் அபிசேகன், பகீரதன் திபேக், மொஹமட் நிஸ்பார் மொஹமட் இஸ்சாத் ஆகியோர் முதல் 5 இடங்களையும் பெற்றுள்ளனர். அதேவேளை, விமலேஸ்வரன் கிசாலன் 6ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, யாழ். இந்துக் கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 33 பேர் 3 பாடங்களிலும் ஏ தர சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்