குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கண்டி – கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிலுள்ள மெனிக்கும்புர பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
அப்பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தரே இந்தக் கொலையைச் செய்துள்ளார்.
வெட்டுக் காயங்களுக்குள்ளான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனக் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபர் பேராதனை, முருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்துடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.