November 28, 2023 8:54 pm

ரணில் அரசு மிக விரைவில் கவிழ்ந்தே தீரும்! – சஜித் ஆரூடம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
“ஊழல், மோசடியாளர்களைப் பாதுகாத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு கவிழ்ந்தே தீரும். அதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆளும் தரப்பில் இருந்துகொண்டு மக்கள் நலன் கருதிச் சிந்திப்பவர்கள் தாமதிக்காமல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்க வேண்டும்.

இன்று அரசியலிலும் ஊழல், மோசடி. விளையாட்டிலும் ஊழல், மோசடி. அரசின் நாளாந்த நடவடிக்கைகளிலும் ஊழல், மோசடி. இவை அனைத்துக்கும் முடிவுகட்ட ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி வெகுவிரைவில் ஆட்சிப்பீடம் ஏறும்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்