December 6, 2023 11:24 pm

தினேஷ் – பிரசன்னவுடன் ரணில் இரகசிய சந்திப்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கொழும்பு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவையும் இரகசியமாக அழைத்து முக்கிய பேச்சு நடத்தியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் மிகவும் இரகசியமான முறையில் நடைபெற்ற அந்தச் சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்தது என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அவர்கள் மூவரும் என்ன பேசினார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்