செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை!

இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை!

0 minutes read

இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மத்துகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

34 வயதுடைய நபரே வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரும் அவரைத் தாக்கினார் எனக் கூறப்படும் சந்தேகநபரும் நெருங்கிய உறவினர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறின் காரணமாக மேற்படி நபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் சட்டவிரோத மதுபானம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியவர் எனக் கூறப்படும் 27 வயதுடைய சந்தேகநபர், தாக்குதலின் பின்னர் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.