செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணிலின் மூளைச்சலவையாலேயே அநுர இந்தியா பயணம்! – நிமல் மகிழ்ச்சி

ரணிலின் மூளைச்சலவையாலேயே அநுர இந்தியா பயணம்! – நிமல் மகிழ்ச்சி

0 minutes read

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தியை மூளைச்சலவை செய்துள்ளார். அதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்தியத் தலைவர்களைச் சந்திக்கச் சென்றுள்ளார்.” – என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்தியாவின் ஆதிக்கம் குறித்து அன்று உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று இந்தியாவுக்கே சென்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பழைய ஆடைகளை அணிந்தவர்கள் கோட் அணிகின்றனர். இது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இது ரணில் விக்கிரமசிங்க மூளைச்சலவை செய்ததால் ஏற்பட்ட மாற்றம்.

அதானி குழுமத்துடன் இணைந்து செயற்படுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் எவ்வாறு அரசை விமர்சித்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர்களில் மனதில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதை நாங்கள் வரவேற்கின்றோம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.