செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த வாரம் அறிவிப்பு?

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த வாரம் அறிவிப்பு?

0 minutes read

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த வாரம் பெயரிடப்படுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க, பஸில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, தம்பிக்க பெரேரா ஆகிய நால்வரில் ஒருவரே அந்த வேட்பாளராக இருப்பார் என்றும் ஊடகங்களிடம் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை,  “எதிரணி உறுப்பினர்கள் கோப் குழுவில் இருந்து விலகுவதால் அக்குழுவின் தலைமைப் பதவியை நான் துறக்கப்போவதில்லை. ஜனாதிபதி அல்லது ஆளுங்கட்சி கோரிக்கை விடுத்தால் பதவி விலகத் தயார்.: – என்றும் ரோஹித அபேகுணவர்தன எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு எதிராகத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு இருக்கின்றது என உறுதிப்படுத்தப்பட்டால் கோப் குழுவின் தலைவர் பதவியை அல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக்கூடத் துறப்பதற்குத் தயார் என்றும் ரோஹித அபேகுணவர்தன எம்.பி. சவால் விடுத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.