செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை துமிந்தவுக்கு விளக்கமறியல் ஜூன் 5 வரை நீடிப்பு!

துமிந்தவுக்கு விளக்கமறியல் ஜூன் 5 வரை நீடிப்பு!

1 minutes read

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட ரி – 56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கொழும்பு, பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த துமிந்த திஸாநாயக்க, சுகயீனம் காரணமாகக் கடந்த 25ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (27) மீண்டும் மகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், துமிந்த திஸாநாயக்க இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.