வவுனியாவில் வீட்டில் மறைந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது வவுனியா, கதிரவேல்பூவரசங்குளம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 10 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளதுடன், 45 வயதுடைய ஒருவரையும் கைது செய்து ஓமந்தைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை ஓமந்தைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.