முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார் எனத் தெரியவருகின்றது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் முறைப்பாட்டுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே ரணில் விக்கிரமசிங்க சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.