செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி மாபெரும் போராட்டம் (படங்கள் இணைப்பு)

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி மாபெரும் போராட்டம் (படங்கள் இணைப்பு)

0 minutes read

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி கவனயீ ர்ப்புப் போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மனிதப் புதைகுழி தொடர்பான பரீட்சாத்த அகழ்வுப் பணிகளில் மொத்தமாக 19 முழுமையான மனித என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இவை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்த நிலையிலேயே வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் – நல்லூர் வளைவுக்கு அருகில் செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரிப் போராட்டம் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உட்படப் பலர் கலந்துகொண்டு நீதி கோரிக் கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் வீதிப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கடமைகளுக்கு எனப் பொலிஸார் அதிகளவில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More