செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

1 minutes read

முல்லைத்தீவு மாவட்டத்திற்கென விளையாட்டுக் கட்டடத்தொகுதியொன்று தேவையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவில் தீர்மானமொன்றினை முன்மொழிந்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் முன்வைக்கப்பட்ட குறித்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், குறித்த தீர்மானத்தை உரிய தரப்பினருக்கு நடவடிக்கைக்காக அனுப்பிவைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வியாழக்கிழமை (28)  இடம்பெற்றநிலையிலேயே குறித்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி இல்லாத நிலைகாணப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றில் நான் பேசியுள்ளதுடன், அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டுக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவேண்டுமெனப் பேசியிருக்கின்றேன்.

முல்லைத்தீவு மாவட்டமென்பது பின்தங்கிய மாவட்டமாக காணப்படுகின்றது. இருப்பினும் இந்த மாவட்டத்திலும் இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்பதை அனைவரும் உணர்ந்து செயற்படவேண்டும். எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டுக்கட்டடத்தொகுதி அமைக்கப்படவேண்டியது அவசியமாகும்.

இந்த விடயத்தில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் ஆளுநர் ஆகியோரும் கரிசனையோடு செயற்படுகின்றனர். ஆகவே, இந்த விளையாட்டு கட்டடத்தொகுதி முல்லைத்தீவு மாவட்டத்திலும் அமைக்கப்படவேண்டுமென தீர்மானமாக முன்மொழிகின்றேன் என்றார்.

இந்நிலையில் குறித்த தீர்மானம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இத்தீர்மானம் நடவடிக்கைக்காக உரியதரப்பினருக்கு அனுப்பிவைப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.