செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு நிலையங்களை முற்றுகையிட பொலிஸாருக்கு உத்தரவு!

சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு நிலையங்களை முற்றுகையிட பொலிஸாருக்கு உத்தரவு!

0 minutes read

சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களை நிபந்தனையின்றி முற்றுகையிடுமாறு பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

திம்பிரிகஸ்யாய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் இதன்போது வலியுறுத்தினார்.

ஜனாதிபதி முதல் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் எனவும், அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி எரிபொருள் துஷ்பிரயோகத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.