செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியா பயணம்

19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியா பயணம்

1 minutes read

கனிஷ்ட  மகளிர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலமாக பிரகாசித்துவரும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி, அவுஸ்திரேலியாவில் இம் மாதம் நடைபெறவுள்ள இரண்டு வகை கனிஷ்ட மகளிர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்  தொட ர்களில் பங்குபற்றவுள்ளது.

இத் தொடரில் இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிகள் பங்குபற்றவுள்ளன. இந்த மும்முனை தொடரில் 2 கனிஷ்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் 4 கனிஷ்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும்.

கனிஷ்ட மகளிர் 50 ஓவர் போட்டிகள்

ஏப்ரல் 7 – இலங்கை எதிர் இங்கிலாந்து (இயன் ஹீலி ஓவல், பிறிஸ்பேன்)

ஏப்ரல் 8 – இலங்கை எதிர் அவுஸதிரேலியா (இயன் ஹீலி ஓவல், பிறிஸ்பேன்)

 

கனிஷ்ட மகளிர் ரி20 போட்டிகள்

ஏப்ரல் 12 – இலங்கை எதிர் இங்கிலாந்து (பில் பிப்பென் ஓவல், கோல்ட் கோஸ்ட்)

ஏப்ரல் 13 – இலங்கை எதிர் அவுஸ்திரேலியா (பில் பிப்பென் ஓவல், கோல்ட் கோஸ்ட்)

ஏப்ரல் 17 – இலங்கை எதிர் இங்கிலாந்து (இயன் ஹீலி ஓவல், பிறிஸ்பேன்)

ஏப்ரல் 18 – இலங்கை எதிர் அவுஸ்திரேலியா (இயன் ஹீலி ஓவல் – பிறிஸ்பேன்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.