செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றியத்தினருக்கு அனுமதி

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றியத்தினருக்கு அனுமதி

0 minutes read

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

யாழ்ப்பாண நீதிமன்றம் இன்று (07) இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பூரணி மரியநாயகம் தெரிவித்தார்.

ஏற்கனவே யாழ்ப்பாணம் திறந்த நீதிமன்றத்தில் செம்மணி மனித புதைகுழியை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிடுவதற்கான அனுமதி கோரப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்

இந்தநிலையில் செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றியத்தினருக்கு அனுமதி | Eu Granted Permission To Visit Chemmani Mass Grave

இதேவேளை செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.