செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த பிள்ளையான் | அம்பலப்படுத்திய அமைச்சர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த பிள்ளையான் | அம்பலப்படுத்திய அமைச்சர்

1 minutes read

இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (09) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது ஒரு தனித்த சம்பவமல்ல, அது 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

வவுணதீவு படுகொலை

அத்துடன், சஹ்ரான் ஹாஷிமுக்கு மேலிருந்து அவரை இயக்கிய ஒரு நபர் மற்றும் குழு குறித்த ஆதாரங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த பிள்ளையான் : அம்பலப்படுத்திய அமைச்சர் | Easter Attack Was A Planned Conspiracy Since 2017

வவுணதீவு காவல்துறை உத்தியோகத்தர்கள் படுகொலை தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுத்திருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சதி மற்றும் அதற்கு உதவியளித்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.