செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தடுத்துவைக்கப்பட்ட புத்தகங்கள்! தீபச்செல்வனுக்கு சுங்கப் பிரிவு விடுத்துள்ள அழைப்பு

தடுத்துவைக்கப்பட்ட புத்தகங்கள்! தீபச்செல்வனுக்கு சுங்கப் பிரிவு விடுத்துள்ள அழைப்பு

1 minutes read

தடுத்து வைக்கப்பட்ட தனது நூல்கள் குறித்து கலந்துரையாட சுங்கப்பிரிவு ஆணையாளர் செவாலி அருகொட அழைப்பு விடுத்துள்ளதாக  தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.

பணி நிமித்தமாக குறித்த கலந்தரையாடலில் கலந்துகொள்ள முடியாமை குறித்து அவருக்கு உடன் தகவல் அனுப்பியதாகவும் இதனால் அடுத்த வாரம் திகதி மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது புத்தகங்களின் விடுவிப்பு தொடர்பாக அரசியல் சலுகை அடிப்படையிலான தீர்வை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும் தனது எழுத்துக்களில் நியாயம் இருக்கிறது என்றும்  எங்கள் கதைகளை எழுதுகின்ற உரிமை தனக்கு இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தகங்கள் குறித்த விளக்கம்

இனிவரும் காலத்தில் இத்தகைய பிரச்சினை தனக்கோ, தன்னைப் போன்ற சிறுபான்மை எழுத்தாளர்களுக்கோ ஏற்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுத்துவைக்கப்பட்ட புத்தகங்கள்! தீபச்செல்வனுக்கு சுங்கப் பிரிவு விடுத்துள்ள அழைப்பு | Customs Division Summoned Theepachelvan

இந்த நிலையில், புத்தகங்கள் குறித்த தங்கள் சந்தேகங்களை, கேள்விகளை முன்வைக்க இருப்பதாகவும் அவை தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் சுங்க ஆணணாயளர் தகவல் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு, மற்றும் கலாசார அமைச்சின் அதிகாரிகளுடன் எழுத்தாளரின் பிரதிநிதி ஒருவருடனும் இச் சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.