செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ராகமவில் பெண்னொருவரை சித்திரவதைக்குள்ளாக்கி தலைமுடியை வெட்டிய சம்பவத்தில் ஐவர் விளக்கமறியல்!

ராகமவில் பெண்னொருவரை சித்திரவதைக்குள்ளாக்கி தலைமுடியை வெட்டிய சம்பவத்தில் ஐவர் விளக்கமறியல்!

1 minutes read

ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் பெண் ஒருவரைத் தாக்கி, அவரது தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை  (18) வெலிசர பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான ராகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் மற்றும் இராஜாங்கனை, கடவத்தை, ராகம மற்றும் திருகோணமலை சீனக்குடா பகுதிகளைச் சேர்ந்த 20, 21, 22 மற்றும் 23 வயதுடைய நான்கு இளைஞர்கள் உள்ளிட்ட ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் பரவிய காணொளி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்த ராகம பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் அவர் வைத்திய பரிசோதனைகளுக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.